மீண்டும் வருகிறார் மைத்திரி: மகிந்தவோ தேடிச்சென்றார்?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவாரென, வீரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே, இது குறித்து ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதென, அவர் கூறினார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அதனை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதன் விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றை பதிவுசெய்தார்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் குமார வெல்கம, டக்லஸ் தேவானந்த ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மறுபுறம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல மகிந்த தரப்புபாடுபட்டுவருகின்றது.

அவ்வகையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதனின் பூதவுடலுக்கு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தனது பதவியை தக்க வைக்க எஸ். தில்லைநாதன் அரச ஊடகங்களில் மகிந்த கோத்த தரப்பின் எடுபிடியாக தமிழ் உணர்வாளர்களை சேறுபூசுவதில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments