தன் மீது பொய்ப்பிரச்சாரமென்கிறார் நிரோஸ்!


அலுவலக வாகனத்தில் மனைவியை ஏற்றிச்செல்லுவது தொடர்பில் தன் மீது திட்டமிட்டு பொய்ப்பிர்சசாரம் முன்னெடுக்கப்படுவதாக வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அவர் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இத்தகைய குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையிலேயே அவர் தனது விளக்கத்தை வழங்கியுள்ளார்.


தவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை பிரத்தியேகப் பாவனைக்காக நான் தவிர்க்கமுடியாத வேலைப்பளு உள்ள வேளைகளில்; பயன்படுத்தி வருகின்றேன். அதற்கான அனுமதியும் உள்ளது. அதற்காக மாவட்டத்திற்கு வெளியில் செல்லும் போது கட்டணத்தை ஏற்கனவே நான் செலுத்தியிருக்கின்றேன்.

மாவட்டத்திற்கு உள்ளான பயன்பாடுகளிலும் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறவிடுவதற்கான பொறிமுறையினை ஏற்படுத்தும் போது சிட்டை வாயிலாக கட்டணம் செலுத்தப்படுவதை நான் மனப்பூர்வமாக விரும்புகின்றேன் என்றே சபை அமர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் பதிலளித்திருந்தேன். 

இப் பிரத்தியேக வாகனப் பாவனைக்கான எரிபொருள் செலவீனம் மாவட்டத்திற்கு வெளியே ஆயின் உரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் செலுத்தப்பட்டு அதற்கான சிட்டை வாகன பயன்பாட்டுப் புத்தகத்தில் அப்போதே இணைக்கப்பட்டும் உள்ளது.

எனினும் மாவட்டத்திற்கு உள்ளாக எழும் பிரத்தியேக குறுந்தூர பயணங்களுக்கான உரிய பதிவளிப்பு முறை நிர்வாக ரீதியில் இல்லாமல் உள்ளது. இந் நிலையில் அதனை ஏற்படுத்துமாறு பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு பல தடவைகள் பணித்துள்ளேன். தவிசாளர்களின் பிரத்தியேக வாகனப் பாவனை தொடர்பான மாகாண கணக்காய்வுக்குழுவின் அறிவுறுத்தல் இருக்கின்ற போதும் பதிவளிப்பு தொடர்பில் போதிய விளக்கங்கள், அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதுபற்றி தாம் கூட்டங்களில் கேட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக ஆளுநரின் அறிவுறுத்தல் பெறப்பட்டு இவ்விடயத்தில் உரிய நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் எனவும்; இப் பிரச்சினைகளுக்கு முன்பே அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் கூட்டங்களில் பேசியுள்ளதாகவும் சபைச்செயலாளர் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளார். நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

விடயம் இவ்வாறிருக்க, அண்மையில் பெயர் குறிப்பிட்ட உறுதிப்படுத்த முடியாத பிரதேசவாசி ஒருவர் உண்மைக்கு மாறாக “தவிசாளர் தன்னுடைய மனைவியினை வாகனத்தில் தினமும் கடமைக்கு ஏற்றி இறக்கி வருவதாகவும் மோசடி அரசியல்வாதி” எனவும் விசாரணையை முன்னெடுக்கக் கோரியும் குறிப்பிட்டு கௌரவ ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதம் உள்;ராட்சி ஆணையாளர், மற்றும் நமது சபையின் செயலாளருக்கும் முகவரியிடப்பட்டிருந்தது. அக் கடிதத்தின் பிரதியை நான் தவிசாளர் சார்ந்த விடயம் என்பதனால் வெளிப்படைத்தன்மைக்காகவும் எமது சபையின் கௌரவ உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள வைபர் தொடர்பாடல் மூலம் பகிரங்கப்படுத்தியிருந்தேன். இக் கடிதத்தின் பிரதிகள் சபை உறுப்பினர்கள் சிலருக்கும் முகவரியிடப்பட்டு சபைக்குக் கிடைத்த நிலையில் அவ் உறுப்பினர்கள் சபைக்கு வரும்போது எமது பொதுசன தொடர்பு உத்தியோகத்தர்கள் வாயிலாகக் கையளிக்கப்பட்டது.

என்னுடைய தவிர்க்க முடியாத அதி கடமை சுமையுள்ள வேளைகளில் அல்லது குறித்த வழிப்பாதையூடாக பயணிக்கும் சந்தர்ப்பத்தில் தவிசாளரின் பாவனைக்காக பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் பிரத்தியேக பாவனையாக மனைவியை கொண்டு சென்று அலுவலகத்தில் விட்டுச்செல்வதற்கு சகல அங்கீகாரமும் நியாயமும் உள்ளது. 

நான் எச் சந்தர்ப்பத்திலும் மக்களின் பணத்தில் சுகபோகம் அனுபவிக்க அரசியலுக்கு வரவில்லை. அரசியல் காரணமாக எனது தொழில்சார் நிலைமைகளை முழுமையாக விடுப்புப் பெற்றே அரசியல் பணியாற்றுகின்றேன்;. நான் அவசர வேலைப்பளு நிலைமையில் கைக்குழந்தைக்கு பால் ஊட்டவேண்டிய தாயை (மனைவியை) மணித்தியாலக்கணக்கில் பேருந்துப்போக்குவரத்து அற்ற வீதியில் காத்திருக்கக் கூறமுடியாது. நான் வழமையில் மோட்டார் சைக்கிளில் ஏற்றி இறக்கி வருகின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபையில் தவிசாளரின் வாகனப்பயன்பாடு பற்றி பிரேரணை கொண்டு வரப்படவில்லை. உறுப்பினர்கள் தமக்கு தவிசாளரின் வாகனப் பயன்பாடு பற்றி கிடைத்த தகவல் பற்றி வினாவினையே முன்வைத்திருந்தனர். அதனை வரவேற்று அவ் வினாவிற்குப் பதிலளிக்கும் போது, என்னுடைய இவ் அறிக்கையில் முன்னர் குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்ததுடன் பிரத்தியேகப் பாவனைக்காக நான் தவிர்க்கமுடியாத வேலைப்பளு உள்ள வேளைகளில் நான் பயன்படுத்தி வருகின்றேன். அதற்காக மாவட்டத்திற்கு வெளியில் செல்லும் போது கட்டணத்தை ஏற்கனவே நான் செலுத்தியிருக்கின்றேன். மாவட்டத்திற்கு உள்ளான பயன்பாடுகளிலும் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறவிடுவதை உறுதிப்படுத்தும் போது சிட்டை வாயிலாக கட்டணம் செலுத்தப்படுவதை நான் மனப்பூர்வமாக விரும்புகின்றேன் என்றே வினாவிற்கான பதிலளிப்பாக நான் தெரிவித்திருந்தேன் என தி.நிரோஸ் விளக்கமளித்துள்ளார்.

No comments