கூட்டமைப்பு இலஞ்சம் வாங்கியது நிரூபணமானது?


இலங்கை அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் கிராம எழுச்சி திட்டத்தை அமுல்படுத்த பொதுமக்களிடமிருந்து கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து இலஞ்சம் பெற்றமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இதனை அம்பலப்படுத்திய அரசியல் தரப்பினருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

இதனிடையே கடந்த யாழ்.மாநகரசபை அமர்வில்; கிராம எழுச்சி திட்டத்தில் பணம் வாங்கியது தொடர்பாக சபையில் நடைபெற்ற விவாதங்களை பகிரங்கப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் மிரட்டப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் வழக்கு போடுவேன் என தன்னை  அச்சுறுத்தியதாகவும் வரதராஜா பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

பணம் வாங்கப்பட்டமை தொடர்பான ஒலிப்பதிவு ஆதராங்கள் தம்மிடமுள்ளதாக உள்ளதாக வரதராஜா பார்த்தீபன் மாநகரசபை அமர்வில் தெரிவித்திருந்த போதும் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதனை மறுதலித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு ஊறுப்பினர் தர்சானந் என்பவர் பணம் வாங்கப்பட்டது உண்மை. அது எல்லோருக்கும் தெரியும். வீதியில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு உணவு வழங்கவே கொடுக்கவே காசு வாங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதில் இருந்து பணம் வாங்கப்பட்டதாவென்ற விவாதத்திற்கு பதில் கிடைத்துள்ளதாக வரதராஜா பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

கிராம எழுச்சி திட்டங்களை முன்னெடுக்கவென பொதுமக்களிடமிருந்து கூட்டமைப்பின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டு வலுப்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 

No comments