நேர்த்தியான நேர பயணத்தில் உலகளவில் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்...

உலகளவில் வானூர்திச்சேவை நிறுவனங்கள், குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் சரியான நேரத்தில் வந்து சென்றடைதல் ஆகிவற்றின் அடிப்படையில் உலகளாவியரீதியில் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது.

இரண்டாவது இடத்தை பிரேசில் நாட்டின் லாட்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஆகியவை பிடித்துள்ளன.

மிகப்பெரிய வானூர்திச்சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் இரண்டாவது இடத்தையும் இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டுள்ள கோஏர் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 91.37 சதவீதம் நேரம் தவறாமையை கடைபிடித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டின் மே மாத நிலவரப்படி 90.75 சதவீதம் நேரம் தவறாமையை பின்பற்றியுள்ளது.

இலங்கையை நிலைகுலைய செய்த  ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகும் இதை ஒழுங்காக கடைப்பிடிப்பதாக ‘பிலைட்ஸ்டாட்ஸ்.காம்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments