ரஞ்சித்தையும் - ஜக்கியும் ஒன்று சேர்ந்தவர்கள் யார்? வெளிக்கும் உண்மைகள்!

'India Conference'க்கு சிறப்பு அழைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சத்குரு ஜக்கியும், இயக்குனர்  ரஞ்சித்தும்.

முதலில் ஹார்வார்டு பல்கலைக்கழகம் எப்படி இயங்குகிறது, யாரால் இயங்குகிறது..?

வால்ஸ்ட்ரீட்டின் Hedge fund எப்படி ஹார்வர்டில் இன்வெஸ்ட் செய்யப்படுகிறது என்பதையெல்லாம் சிவா  அய்யாத்துரை ( email கண்டுபிடித்தவர் )
மிக விரிவாக முன்பே விளக்கி இருக்கிறார்.

மோசாத்தின் இந்திய ஏஜெண்டான சுப்பிரமணியசாமி ஹார்வர்டில் முன்பு கெஸ்ட் விரிவுரையாளர் என்பதும்..

ஹார்வார்டு மூலமே கமல ஹாசன் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஓப்பனிங் கொடுத்து அழைத்து வரப்பட்டார் என்பதும் இப்பதிவோடு தொடர்புடைய நிகழ்வுகளே.

ரஞ்சித்தும், ஜக்கியும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட அந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களின் பட்டியல்தான் இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் ஹைலைட்.

முதலாவது ஸ்பான்சர் லக்ஷ்மி மிட்டல்.

லட்சுமி மிட்டல், வேதாந்தா அனில் அகர்வால் மற்றும் மும்பையின் எஸ்ஸார் ஆயில் குருப்'களுக்கு இடையே இருப்பது ஒரு முக்கோண காதல் கதை.

ரஷ்யாவின் Rosneft'க்கும் இந்த குழுமங்கங்களுக்கும் இடையிலான சிக்கலை பஞ்சாயத்து செய்தவர் RSS idealogue குருமூர்த்தி என்று wire செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

மிட்டல்களிடமிருந்தும், வேதாந்தாவிடமிருந்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பனிடமிருந்தும் தமிழர்களைக் காப்பாற்ற தேவதூதர் எவரும் வருவார்கள் என்று  தமிழர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை ..
தன் சுயஅடையாளத்திற்காக
ரஞ்சித் செய்யும் முதலீடு 'தலித்தோ’ என்கிற அச்சம் எழுவது இயல்பாக இருக்கிறது ..
இதை எல்லாவற்றையும்  விட
நிகழ்ச்சியின் மற்ற ஸ்பான்சர்கள், பாஜக மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பியூஷ் கோயலின் பினாமி நிறுவனமான பிரமல் குழுமம்.

மற்றொன்று, நரேந்திர மோடியின் நிதி ஆயோக்கில் பணியாற்றும் அமிதாப் கன்ட்டின் 'நெட்ஒர்க் கேபிடல்' எனும் தனியார் நிறுவனம்.

ஆர்எஸ்எஸ் அபிமானி மதுரா ஸ்ரீதர் ரெட்டி, இந்துஸ்தான் லீவர் மற்றும் பல.

பழங்குடிகளையும், ஆதிவாசிகளையும், அவர்களின் வாழிடங்களையும் உயிரோடு தின்று சேமிக்கும் ஜக்கியுடன் உரையாடல் ..
இதைவிட இன்னொன்று இருக்கிறது
இந்நிகழ்வு ஒருகிணைப்பு செய்தவர்கள்
இந்துத்துவ அமைப்புக்களும், அது சார்ந்த ஆளுமைகளும், நிறுவனங்களும் ஹார்வர்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது ..!

தலித்தியம் பேசிக்கொண்டு என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் எவனும் கேட்கக்  கூடாது  என்று முற்போக்கு அறிவாளிகள் உளறினாலும்
அவர்களுக்கான பதில்
*வாங்க விவாதிப்போம் ..!*

இறுதியாக ரஜினியை தலித் அம்பாசிடர் தனது படத்தில் காட்டுவதற்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதையும் வரலாறுகள்தான்
நமக்கு வழிகாட்டுகின்றன ...!

 ராமாதாசு அத்வாலே, ராம்விலாஸ் பாஸ்வான் என்னதான் அம்பேத்கரை
 தூக்கிபிடித்தாலும் அவர்களை
 தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கபோவதில்லை.
அதேபோலத்தான் மாயவதியும் உயர்சாதி வகுப்பினருக்கு 20% இடஒதுக்கீடு வேண்டுமென்று பேசியவர் அது அந்த மண்ணுக்கான அரசியல் ..

எப்போதும் ஆரிய, பிராமனியத்தை எதிர்த்து நிற்கும் மண்  தமிழ் மண் .. அந்த ஆரியம் அம்பேத்கர் ரூபத்தில் வந்தாலும் சரி.
தலித் என்கிற அடைமொழியுடன் வந்தாலும் சரி.
எதிர்த்து கேள்வி எழும் தமிழகத்தில் ..

 - கிருஷ்ணா முத்துக்குமரப்பன் -

No comments