ஏட்டிக்குப்போட்டியாக காவல்துறையில் முறைப்பாடு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச மற்றும் எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) முற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் எஸ்.பீ. ஆகியோர் தெரிவித்து வரும் பல பொய்யான குற்றச்சாட்டுக்களால் தான் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படத் தூண்டும் வகையில் அவரது அறிவிப்புக்கள் காணப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments