கூப்பிடவேயில்லை: பிறகெப்படி பாதுகாப்பு?


மைத்திரி – ரணில் குடுமிப்பிடி சண்டையில் இறுதியாக பலியிடப்பட்ட பூஜித தான் மைத்திரியால் பழிவாங்கப்பட்டதை போட்டுடைத்துள்ளார்.

அவ்வகையில் மைத்திரி தலைமையில் நடைபெறும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று காலை சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடைசியாக 2018 ஒக்ரோபர் 23 ஆம் நாள் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே நான் கலந்து கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர், எந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் எனக்கு அறிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலர் ஊடாகவே அவர் இந்த தகவலை எனக்கு அறிவித்திருந்தார்” என்றும்  பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் தற்போது பூஜித பதவி நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தனக்கு ராஜதந்திர பதவி தருவதாக தெரிவித்து பதவியை ராஜினாமா செய்ய கோரியதாகவும் மறுத்த நிலையில் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர் தற்போது நீதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments