நாடாளுமன்றைக் கலைப்பது தொடர்பில் ஆராய்வு

உடனடி பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகிறது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பில் இது பற்றி பேசியிருக்கும் பிரதமர் ரணில் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்றை செய்திருக்கிறார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஸ்திரமான ஆட்சியொன்றின் தேவை உள்ளதால் தேர்தலுக்கு செல்வதே நல்லதென பல தரப்பிலும் கருதப்படுவதால் இப்படி இவ்விடயம் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
விசேட பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றுவதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லலாமென அரசியல் வட்டாரங்கள் கூறின.

No comments