வெடி வெடித்து ஒருவர் படுகாயம்

மூலை வெடி­யைக் கையில் வைத்­துப் பரி­சோ­தித்­த­போது அது வெடித்­தது. அதில் ஒரு கையை­யும், கண்­ணை­யும் இழந்த நிலை­யில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று பருத்­தித்­துறை, கலப்­பி­ன­வந்­தை­யில் நடந்­துள்­ளது. பருத்­தித்­துறை 2ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த இரு பிள்­ளை­க­ளின் தந்­தை­யான யோக­ராசா ராஜ­ஜோதி (வயது-33) என்­ப­வரே படு­கா­ய­ம­டைந்­துள்­ளார்.

கலப்­பி­ன­வத்­தை­யில் நேற்று நடந்த இறப்பு வீடொன்­றில் வெடி­கள் கொழுத்­தப்­பட்­டுள்­ளன. அப்­போது மூல வெடி­க­ளும் வெடிக்க வைக்­கப்­பட்­டுள்­ளன. ஒன்­றுக்கு மேற்­பட்ட வெடி­களை இணைத்து வெடிக்க வைக்­கப்­பட்­ட­போது அதில் ஒன்று வெடிக்­க­வில்லை.

வெடிக்­காத வெடியை எடுத்து ராஜ­ஜோதி பரி­சோ­தித்­துள்­ளார். அப்­போது அது திடீ­ரென வெடித்­துள்­ளது. அதில் அவர் படு­கா­ய­ம­டைந்­தார்.

No comments