பரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான  பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாபெரும் வெற்றியையும் பாராட்டுதலையும் பெற்றது.

பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து விருதுகளை வாங்கி குவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு கோனார் தமிழ் உரையில் சில எடுத்துகாட்டுகளுக்கு இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் பற்றி உதாரணமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தின் மூலம் கூட பாடம் எடுக்கலாம் என்பதை அழகாக கூறியிருப்பது பரியேறும் பெருமாள்  படத்திற்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரமாக அமைந்துள்ளமை படக்குழுவினரையும் திரை தமிழ் திரை உலகத்தினரையும் மகிழச்சப்படுத்தியுள்ளது.

No comments