தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை முகநூலில் தொடர்புகொண்டவர்களை தேடி சோதனை நடவடிக்கை;

ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தமிழகம் கோயம்புத்தூரில் 7 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது தேசியப் புலனாய்வு . இந்த சோதனையைத் தமிழகத்தைச் சேர்ந்த 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை குறித்துப் பேசிய தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், “இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

No comments