தொடர்பலி எடுக்கும் நீட்; குமுறும் பெற்றோர்கள்!

நீட் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் குறைவாக பெற்றதால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மற்றுமொரு மாணவியையும் நீட்டுக்காக இழந்துள்ளது தமிழகம்.

நீட்டுக்காக அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா உள்ளிட்ட பல மாணவர்களை தமிழகம் பலிகொடுத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வருடமும் நீட் தமிழக மாணவர்களை காவு வாங்கி வருவதாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கொந்தளிக்கின்றனர்.  நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டுமொருமுறை தமிழகத்தில் பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது.

No comments