வல்வெட்டித்துறையில் ஆரம்பம்:கல்முனையில் முடிவு!


கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து,வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் இராஐன் எனும் தமிழ்தேசியகூட்டமைப்பு கல்முனை மாநகரசபை உறுப்பினர் மட்டும்; நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரதத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார்.ஏனைய நால்வரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்,

எனினும் அடையாள உண்ணாவிரதம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று கல்முனைக்கு உறுதி மொழியினை வழங்க சென்ற அரச அமைச்சர்கள் மற்றும் கூட்டமைப்பினர் போராட்டகாரர்களால் அடித்து துரத்தப்பட்டிருந்த நிலையில்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.

No comments