கதை வசனம் எழுதத் தெரிந்தவருக்கு நன்றாக நடிக்கத் தெரியவில்லையே?

•நன்றாக கதை வசனம் எழுதத் தெரிந்தவருக்கு
நன்றாக நடிக்கத் தெரியவில்லையே?

கடைகார பெண்ணை “தேவடியா” என ஜெயமோகன் திட்டியதாக நக்கீரன் செய்தி கூறுகிறது.

கணவன் முன்னிலையில் மனைவியை கேவலமாக திட்டியதாலேதான் கணவன் ஜெயமோகனை தாக்கியதாக சம்பவத்தை பார்த்த டீ கடைக்காரர் கூறுகிறார்.

ஜெயமோகன் பொறுமையாக நடந்து கொண்டிருக்கலாம் என மனிதவுரிமைவாதி ஆ.மார்க்கஸ் கூறுகிறார்.

ஜெயமோகன் வழக்கை வலுவாக்குவதற்காகவே அரச மருத்தவமனையில் வந்து படுத்திருப்பதாகவும் இதனால் உண்மையான நோயாளிகள் பாதிக்கப்படுவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடைகாரரின் மனைவியும் முறைப்பாடு செய்துள்ளார். ஜெயமோகனும் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் ஜெயளமோகனின் அரசியல் செல்வாக்கு காரணமாக பொலிசார் ஜெயமோகனின் முறைப்பாட்டைம மட்டும் ஏற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தின் முழு விபரமும் அறிந்த பல இலக்கியவாதிகள் வழக்கை வாபஸ் பெறும்படி ஜெயமோகனிடம் கேட்டும் அவர் இன்னும் வாபஸ் பெறவில்லை.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் ஒருமுறை ஜெயமோகன் வங்கி ஏடிஎம் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் வங்கி முகாமையாளர்களோ இவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் பெருந்தன்மையோடு நடந்து கொண்டனர்.

இவரோ அச் சம்பவத்தை தனது வீர தீரச் செயலாக எழுதியிருக்கிறார். தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இலக்கிய ஜம்பவான் என்ற கற்பனையில் மிதந்து திரிகிறார்.

அண்மையில், பெண் எழுத்தாளர்கள் தங்கள் அழகைக் காட்டியே தமது எழுத்தை விற்பனை செய்கின்றனர் என்று இவர் எழுதியிருந்தார்.
அப்புறம் இதற்கு எதிர்ப்பு வரப் போகிறது என்று அறிந்தவுடன் நைசாக நீக்கி விட்டார்.

இவர் என்ன கூறினாலும் அதை ஒரு இலக்கியவாதியின் எழுத்துச் சுதந்திரம் என்று நியாயப்படுத்த ஒரு “செம்பு” சீடர் கூட்டம் அவருக்கு உண்டு.

அந்த திமிரில்தான் அவர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பல கருத்துகளை கூறி வந்திருக்கிறார்.

ஆனால் இந்த புளித்த மா சம்பவம் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் ஒரு நல்ல பாடத்தை புகட்டியிருக்கிறது.

குறிப்பு- ஜெயமோகன் விளம்பரத்திற்காக செய்கிறார். எனவே அவரைப் பற்றி எழுதி அவருக்கு விளம்பரம் பெற்றுக் கொடுக்க வேண்டாம் என நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.  உண்மைதான். அதனால்தான் இதுவரை நான் அவரைப் பற்றி எழதியதில்லை. ஆனால் “ ஜெயமோகன் மாவுப் பிரச்சனை பற்றி எழுத விரும்புகிறேன். ஆனால் அவரது சீடர்கள் வந்து வகுப்பெடுப்பார்களே என்று அஞ்சுகிறேன்” என ஒரு பெண் எழுத்தாளர் எழுதியயைப் படித்த பின்பே இவரது இலக்கிய அராஜகம் குறித்து கண்டிப்பாக எழுத வேண்டும் என தீர்மானித்தேன்.

- பாலன் சந்திரன்-

No comments