ஐ.எஸ் அமைப்பில் சேர இருந்த வாலிபர் கைது!

சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் சேரத் திட்டமிட்ட சிங்கப்பூர் வாலிபர் ஒருவர்  அந்நாட்டு காவல்துறையால்  பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
40 வயது உடைய சிங்கப்பூரை சேர்ந்த  இம்ரான் மாமூட்  என்பவரே இவ்வாறு கைது செய்து தடுப்புக் காவலில் உள்ளார்,வேறு மேலும் இருவர் இவ்வாறு தடுத்து வைத்திருப்பதாக  பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது..
ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட 39 வயது முகமது ஃபைரூஸ் மற்றும்.தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 62 வயது ரஸிடா மஸ்லானுக்கு ஆகிய இருவருமே கடந்த மார்ச்  மாதம் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments