ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு எடுத்து கொள்வதற்கு அவசர கால சட்டத்தின் கீழ் கலந்துரையாடல்கள் அவசியம் இல்லை என குழு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதற்கு முன்னர் இந்த சட்டவிரோத பல்லைக்கழகத்தை

அரசாங்கத்திற்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவசர கால சட்டத்தின் கீழ் இதனை எடுப்பதற்கு ஹிஸ்புல்லாவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கான அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும், இதற்கு நாடாளுமன்றத்தினால் உடனடியாக நடவடிக்கை

மேற்கொள்ள வேண்டும். அதற்கான தாம் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments