மீனவர் பிரச்சினை:தலைமறைவான கூட்டமைப்பு!


வடகிழக்கில் வேகமாக கால்பதித்துவரும் தெற்கின் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அரசியல்வாதிகள் சகிதம் வடக்கில் மேற்கொள்ளமுற்பட்ட புதிய முயற்சிகள் தடைப்பட்டுள்ளது.

அவ்வகையில் நிலையான மீன்பிடி கைத்தொழில் தொடர்பாக கொள்கை வகுப்பிற்கான கூட்டமொன்றி;ற்கு யாழில் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொறுப்புமிக்கவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

தேசிய  மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆனுசரணையில வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் ஆலம் தலைமையில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான வட்ட மேசை மாநாட்டிற்கு தமிழ் தமிழ்தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுக்கும்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும்  பாராhளுமன்ற உறுப்பினர்கள்  அல்லது அவர்கள் சார்பான பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை .முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். 

இங்கு கருத்துக்களை தெரிவித்த அனைவரும் தென்னிலங்கை மீனவர்களின் பாதிப்பு,ரோளர் படகுகளாலான பாதிப்பு ,சுருக்கு வலை பாதிப்பு மற்றும் காற்றாலை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தனர் மேலும் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களால் ஒரு ஆவணமும் வெளியீடு செய்யப்பட்டது.

மேலும் நேற்றைய கூட்டத்தினில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக் பாராளுமன்றத்தில் தமது பிரச்சினைகளை பேசி அவற்றை ஒரு சட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளாமை மீனவர்களின் பிரச்சினையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை கொள்ளாமையை காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments