அமைச்சரவை கூட்டம் 18இல்உறுதியானது!

சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம், வரும் 18ஆம் நாள், செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த 11ஆம் நாள், செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை.
தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்த நிலையிலேயே, கடந்த வார அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை.
எனினும், அடுத்தவாரம், ஜூன் 18ஆம் நாள் காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments