இலஞ்சம் வழங்கிய மொஹமட் சிபான் பிணையில் விடுதலை

தேசிய தௌஹீத் ஜமாத்  அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய சந்தேக நபரான மொஹமட் சிபான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 04 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 

அத்துடன் வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம்  திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்துல் மஜீட் மொஹமட் நியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டது. 

No comments