சுதந்திரபுர படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(10) இடம்பெற்றது.

கடந்த 1998ஆம் ஆண்டு இதே தினத்தில் இலங்கை விமானப்படையாலும், இராணுவத்தினாலும் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வன்னி குரோஸ் நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பேரவையின்ந்த படுகொலை நினைவேந்தலின் பொது சுடரினை படுகொலை தாக்குதலில் தமது குடும்பத்தில் 4பேரை இழந்த தாய் மற்றும் தந்தை சுடரினை  ஏற்றிவைத்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

No comments