யாழ்.பல்கலையில் கற்றல் செயற்பாடுகள் முடக்கம்?


கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர் சிற்றுண்டிசாலை நடத்துநர் உள்ளிட்ட அனைவரையும் குற்றச்சாட்டுக்களின்றி முழுமையாக விடுவிக்க மாணவ தரப்பு வலியுறுத்தியுள்ளது.

அவர்கள் அனைவரையும் முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் நாளை முதல் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் கற்றல் செயற்பாடுகளிற்காக நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்களது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மே3ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும் நீண்ட இழுபறிகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்கலைகழக மாணவர்கள், மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.நான்கு சட்டங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்தது தெரிந்ததே.

No comments