பாலச்சந்திரனை கொன்றது இந்தியா; திருமுருகன் மீது வழக்கு!

நேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற "தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டத்தில்" மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விதிமுறைகளை மீறி பேசியதாய் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153(A), 505(2) ஆகிய இரு பிரிவுகளில் பிஜேபியின் அடிமை அரசாக இருக்கும் தமிழக அதிமுக அரசு வழக்கு பதிந்து உள்ளது.

தோழர் திருமுருகன் காந்தி பேசும் அனைத்து கூட்டத்திற்கும் ஏதேனும் ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்கிற அழுத்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து அவர் மீது பொய்யான பல வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

ஒரு பொறுப்பான அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நாக்கை அறுப்பேன் கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என்று பேசும் ராஜேந்திர பாலாஜி மீதும், எப்போதும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து இரு சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியும் எழுதியும் வருகிற பிஜேபியின் ஹெச் ராஜா போன்ற நபர்கள் மீதும் பாயாத வழக்கு. தோழர் திருமுருகன் காந்தி மீது மட்டும் பாயுமென்றால், இந்த அரசு பிஜேபியின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.

அதேவேளை இந்த வழக்கிற்கு முக்கிய காரணமாக கருதுவது
இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய `ட்ராய்க்கா' (Troika) என்ற ஆறுபேர் கொண்ட குழு இனப்படுகொலையைத் திட்டமிடுகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் அங்கீகாரத்துடன் இந்த இனப்படுகொலை நடைபெறுகிறது. 12 வயதுச் சிறுவன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டதைப் பற்றி, சரத் ஃபொன்சேகா பேசுகையில் `இந்திய ராணுவத்தின் உடையைத் திருடி விடுதலைப் புலிகள்தான் பாலசந்திரனைக் கொன்றது' என்றார். நான் இங்கே கேட்க நினைப்பது, பாலசந்திரன் கொல்லப்பட்ட அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தினம் மே 19 காலை 10 மணி என்று மெட்டா தரவு மூலம் தெரியவருகிறது. மே 18 இரவே யுத்தம் முடிந்துவிட்டது என்று ஐ.நா-வும் இலங்கை அரசும் அறிவித்துவிட்டன. மே 19 காலை ஆயுதங்களோடு இருந்தது சிங்கள ராணுவமும் இந்திய ராணுவமும்தான். பாலசந்திரனைக் கொன்றவர்கள், இந்திய ராணுவத்தைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? பாலசந்திரனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட தோட்டா எங்களுடைய வரிப்பணத்தில் வந்ததா? எனும் பேச்சுதான் என்று தமிழ் உணர்வார்கள் கூறுகின்றனர்.

No comments