வனாத்தமுல்லையில் வெடிப்பு! மூவர் காயம்!

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வனாத்தமுல்லை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகப் பிரதேச மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மின் பிறப்பாக்கியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  குறித்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடொன்று பற்றியெரிந்துள்ளதாகவும்,  3 பேர் தீக்காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments