சுன்னாகத்தில் விபத்து - ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

யாழ்.பலாலி வீதி சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் படுகாயமடைந்துள்ளாா்.

வான் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதேவேளை, சிலாபம் கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற மேலும் ஒரு வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்று, கொள்கலன் பாரவூர்தியொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிர் திசையில் பயணித்த உந்துருளியுடன் மோதி நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளியை செலுத்திய 36 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

No comments