தமிழ் நாடு தனிநாடுதான்! தாமரையோடு இலையும் கருகியது!

இதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37
இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது 

இந்திய பாராளுமன்ற  தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு வடக்கே வெற்றி கிடைத்திருந்தாலும் அது ஒரு மதவாத அடிப்படையான வெற்றியாக பார்க்கப்படுகிறது,  எனினும் தமிழகத்தில்  அந்த பாஜகவின் மதவாத கொள்கை தமிழகத்தில் எடுபடவில்லைஅதேபோல் , அவர்களுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக, பாமக , தேமுதிக போன்ற கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளனர், அதைவிட அந்த கட்சிகளின் தலைவர் பொறுப்பில் இருப்பர்வல் கூட தோல்வியடைந்திருப்பது பேரதிர்ச்சியை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது, தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களாக தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிஷ்ணன் மற்றும்  சர்ச்சைக்குரிய எச்.ராஜா படுதோல்வி அடைந்திருப்பது பாஜகவினருக்கு மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் என்னதான் சாதி கலவரங்கள். பிரச்சனைகள் இருந்தாலும் சமுக ஒற்றுமை , தீய சக்திகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடுவது என்பது மக்களிடையே கட்சி , சாதி மத வேறுபாடுகள் கடந்து இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

சீமானின் நாம்தமிழர் கட்சி, தினகரனின் அமமுக , கமலஹாசனின் மநீம போன்றன அதிமுக , திமுகவுக்கு மாற்று சக்தியாக நின்றிருந்தாலும் மக்கள் ஆய்வாளர்கள் கூறுவதைப்போல பிரச்சனைக்கான தற்காலிக தீர்வாக முதல் எதிரியை வீழ்த்துவதிலேயே அக்கறை செலுத்துகிறார்கள்.அதனால்தான் திமுக கூட்டணிக்கு இவ்வாறானதொரு  வெற்றி கிடைத்திருப்பதாக நாம் கருதலாம்

 பஜக்கவை வளர்க்க நீர் ஊற்றிய அதிமுகவுக்கும் கொடுக்கப்பட்ட  பதிலடியை இந்த திமுகாவின் வெற்றி.
இந்த வெற்றியின் பெரும்பங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரச்சாரத்துக்கு உண்டு, அவரும் கடந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து பெற்ற தோல்வியில் பல படிப்பினையினை கொடுத்திருக்கும் என தோன்றுகிறது,
இனி  இந்த வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி தக்கவைத்துக்கொள்வது இனி அவர்களின் செயல்பாடுதான்.
திமுகாவினரும் பெரியாரியவாதிகள் சமூக ஆர்வலர்கள்  சொல்வதைப்போல இது பெரியார் பூமி , அண்ணா பூமி என்பதை ஒப்புவிப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன எனத்தோன்றுகிறது. தமிழகம் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

No comments