அகதிகள் படகு கவிழ்ந்து 70பேர் பலி!

அகதிகளை ஏற்றிய படகு ஒன்று மத்தியதரைக்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.இதில் 70 வரையானோர் பலியாகியிருக்கலாம் அஞ்சப்படுகின்றது.

துணை சஹாரா ஆபிரிக்காவில் இருந்து அகதிகளை ஐரோப்பாவைச் சென்றடையும் நோக்கில் வந்தவர்களின் படகே இவ்வாறு மூழ்கியுள்ளதாகவும்,இதில்  மூன்று பேரின் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர்காணாமல் போயுள்ளனர், என்று துனிசிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் துனிசியா  இராணுவ கப்பல்களில் மற்றும் உலங்குவானூர்திகள் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். 60 முதல் 70 பேர் வரை இந்த மீன்பிடி படகில் பயணித்ததாக நம்பப்படுகிறது.

No comments