நீச்சல் குளத்தில் குளித்த காவற்துறை அதிகாரி பலி!

நீர்க்கொழும்பு - பமனுகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றின் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த  காவற்துறை அதிகாரியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று பணி முடிந்து வீடு செல்லும் வழியில் காவற்துறை அதிகாரி உணவகத்திற்கு சென்று நீச்சல் குளத்தில் நீராடியுள்ளார்.

உயிரிழந்தவர் 58 வயதுடைய கிம்புலாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த காவற்துறை அதிகாரியெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments