அடக்கி வாசிக்க சொல்லும் காவல்துறை!


ஊடகவியலாளர்கள் அடக்கி வாசிக்கவேண்டுமென இலங்கை காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் இரகசியமாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமெராக்களை அகற்றுமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.அத்துடன் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்பலகையை மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என பெயர் மாற்றுமாறும் பொலிஸாருக்கு; மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பொலிஸார் நேற்றையதினமே அதனை நடைமுறைப்படுத்துவதாக நீதிமன்றில் தெரிவித்ததோடு மாலை 4மணியளவில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து பெயர் பலகையை அகற்றி நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றும் வேலையை செய்துள்ளனர்.

இந்த சம்பவங்களை செய்தி அறிக்கையிடலுக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அங்கே கடமையில் நின்ற கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் குமணனை தாக்கியிருந்தார்.அத்துடன் அவரை  கையால் தாக்கி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியதோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து தமது கைத்தொலைபேசிகளால் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தார்.


நேற்றையதினம் (26) பிள்ளையார் ஆலயத்தில் நின்ற தமிழ் மக்களை பிக்குவின் முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸார் ஆலயத்துக்கு வந்து அங்கே அவர்களை நிலத்தில் அமர வைத்து குற்றவாளிகளை போன்று பதிவுகளை மேற்கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர் . இதனை செய்தியாக குமணனே வெளிகொண்டுவந்திருந்தார். அந்த செய்திகள் தொடர்பான பத்திரிக்கை ஆதாரங்கள் நேற்று மன்றில் வழக்கின் ஆதாரமாக காண்பிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது  தொடர்பாக இன்று வன்னி காவல்துறை தலைமையகத்திற்கு குறித்த ஊடகவியலாளர் முறையிட சென்றிருந்த போதே அடக்கி வாசிக்க காவல்துறை அதிகாரிகள் பணித்துள்ளனராம். 

No comments