ஆசிரியர் தாக்கப்பட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம்

ஹற்றன் மஸ்கெலியா கவரவில தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள் தாக்கபட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ஆசிரியர்கள், பெற்றோர்கள் கறுப்புப்பட்டி அணிந்து இன்று காலை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த ஆசிரியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஆகவே இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சும், சம்பந்தபட்ட தரப்பினர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments