படைகளது பாதுகாப்புடன் தாக்குதலா?


இலங்கை படைகளிற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிங்களவர்கள் பொலிஸார், படையினரின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி, படையினரின் முன்னிலையிலேயே சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

வீதியோரங்களிலிருந்த தற்காலிக வர்த்த நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில கடைகள், பிரட்டி உருட்டித்தள்ளப்பட்டுள்ளன.

இதனால், முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் சிலர், வயல்வெளிகளில் கூடாரங்களை அமைத்துத் தஞ்சமடைந்துள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அறிக்கையொன்றை விடுத்துள்ள அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை, பொறுமை காக்குமாறு சகல முஸ்லிம்களிடமும் கேட்டுகொண்டுள்ளது.

சிலாபத்தை சேர்ந்த வர்த்தரொருவர், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட கருத்தொன்றை அடுத்து ஏற்பட்ட பதற்றமான நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, சிலாபத்தில்,பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், குருநாகல், அலகொலதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியிலுள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தை தடைச் செய்யப்பட்ட இயக்கமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு வழங்கியதாக கூறப்படும் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான வர்த்தகரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, அந்த கட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத பரப்புரையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் கதிர்இயக்கப் பிரிவின் அதிகாரி கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்தே, அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

அந்தப் பதற்றமான நிலைமை தொடர்ந்திருந்த நிலையிலேயே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தது. அதனையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஆயினும் சிங்வளவர்களது தாக்குதல் தொடர்கின்றது.

No comments