மைத்திரியை சந்தித்த ஞானசார தேரர்!


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தாயார் சகிதம் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டதன் பின்னர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அவர், வெளியேறியிருந்தார்.

ஜனாதிபதியினால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள், நீதியமைச்சின் ஊடாக, சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர் அவர், விடுவிக்கப்பட்டார்.

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு, 6 வருடங்கள் அனுபவிக்கும் வகையில் 19 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையை கடந்தவரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி விதித்தது.

இதேவேளை, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொதுமன்னிப்பு, அரசமைப்பு முரணானது என்றும், அரசமைப்பை மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மீறிவிட்டார் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே தனது தாயார் சகிதம் அவர் மைத்திரியை சந்தித்துள்ளார்.

இதனை மைத்திரி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments