முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒழுங்கமைப்பின் கூட்டம் - பிரித்தானியா
முள்ளிவாய்க்கால் நிகழ்வுத்திட்டத் தயாரிப்பில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது கடந்த 3 மாதகாலமாக ஈடுபட்டிருந்தமை அறிந்ததே! இதன் தொடர்ச்சியாக கடந்த 05-05-19 ஞாயிறு அன்று பணிப்பகிர்ந்தலும் பொறுப்புக்கள் ஒப்படைப்பும் இடம்பெற்றது. இதில் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குகொண்டு பல்வேறு தரப்பட்ட பொறுப்புக்களை பகிர்ந்கொண்டனர்.
லண்டன் கிறீன்பார்க் என்னும் இடத்தில் ஆரம்பித்து பிரித்தானிய தலைநகரத்தின் பல முக்கிய வீதிகளினூடாகச் சென்று பிரித்தானிய பாராளுமன்றச் சதுக்கத்தில் நிறைவடையும் இப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டும் பணியில் பிரித்தானியா வாழ் தமிழ்பொதுஅமைப்புக்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ளனர்.
இப் பேரணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாகவும்இ பிரித்தானிய மக்களுக்கு ஈழத்தமிழ்மக்களின் தற்போதைய நிலையை விளக்கும் முகமாகவும் 11-05-19 தொடக்கம் 17-05-19 வரை கவன ஈர்ப்புப்போராட்டமும் உண்ணாவிரத நிகழ்வும் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கைத்தீவில் தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் சிறீலங்கா அரசின் நீண்ட திட்டமிடலின் அதியுச்சமே முள்ளிவாய்க்கால் படுகொலையாகும். இவ் இனவழிப்பு நடைபெற்று 10 ஆண்டுகளின் பின்னும் தமிழர் மீதான வன்முறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையும்இ பயங்கரவாதம் என்னும் போர்வையில் மத கலவரத்தை உண்டுபண்ணி இலங்கையில் வாழும் சிறுபான்மையினங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுவதையும் உலகுக்குரைக்க பேரணியாய் அணி திரள்வோம்.

Post a Comment