கருணாவும் கைவிட்டான்?
கிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளதாகவும், காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு, அதன் தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக வடிவம் எடுத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் தறபோதைய ஆளுநர் பாதுகாப்பில் தப்பித்து ஓடிய கருணா மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தாக்குதலின் பின்னர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். கிழக்கில் இந்த பயங்கரவாதம் அத்திவாரமிடுவதற்கு அவர்களும் ஒரு காரணமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் மேலோங்குவதற்கான வாய்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பே வழங்கியது. கிழக்கு மாகாண சபையிலும் அவர்களிடம் ஆட்சி அதிகாரங்களை வழங்கி அவர்களை மேலோங்கச்செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பே செய்தது எனவும் முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment