பின் லேடன் படத்துடன் சுற்றிய மகிழூர்ந்து! மடக்கிப் பிடித்த காவலர்கள்!



சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் உருவம் ஒட்டப்பட்டு  கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த மகிழூந்து ஒன்றை காவல்துறையினர்  மடக்கிப் பிடித்து  மகிழூர்ந்தை பறிமுதல் செய்ததோடு ஓட்டுனரையும் கைதுசெய்துள்ளனர்.

கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகபெரிய தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள இந்நிலையில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் படத்துடன் சுற்றியது அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கியது.

மேற்குவங்க தேச இலக்கத்தோடு இருந்த அந்த மகிழூர்ந்து தனக்கு சொந்தமானது அல்ல என்று வாக்குமூலம் அளித்ததையடுத்து மேலதிக விசாரணைக்காக காவல்துறையினர்   வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். 

No comments