ஜேர்மன் தொழில்நுட்பத்தின் மற்றுமோர் படைப்பு! மின்சார நெடுஞ்சாலை!

சூழல் மாசுபடுதலையும் , காலநிலை மாற்றத்திலும் உலகநாடுகள் அக்கறையெடுத்துவரும் நோக்கத்தில் பல்வேறு புது முயற்சிகளை பல்வேறு நாடுகள் எடுத்துவருகிறது. அண்மையில் பேருந்து  மேற்கூறரையில் புல்வளர்த்து காரியமில்லை வாயுவெளியேற்றத்தை குறைக்க முன்னோட்டம் பார்த்ததை நமது பதிவு இணையத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அதுபோல் இப்பொழுது  ஜேர்மனியில் மின்சார நெடுஞ்சாலை ஒன்று ஆரம்பிப்பதற்கு பரீட்ச்சார்த்தம் செய்யப்பட்டது. அதாவது பாரவூர்திகள் ,கனரக வாகனங்கள் பயணிப்பதற்கென பிரத்தியேகமான மின்சார தொடரூந்துகள் செல்லும் மாதிரியான தொழில்நுட்பத்தைக்கொண்ட நெடுஞ்சாலை அமைத்து 5 கிலோமீற்றர் வரை அமைத்து பாரவூர்திகள் ஓட்டிப்பார்த்துள்ளனர்.இது முக்கியமான நகரங்களான பெர்லின், பிராங்பேர்ட்  போன்ற இடங்களுக்கு 2022ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீமென்ஸ் மொபிலிட்டி GmbH எனும் தொழில்நுட்ப நிறுவனமே இதற்கான திட்டத்தினை வகுத்து முயற்சி எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.



No comments