மணிவண்ணன் வழக்கை இழுத்தடிக்கும் சுமந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனின் யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றை நாடியிருந்த தமிழரசுக் கட்சி வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மன்றில் கால அவகாசம் கோருதல், வழக்கு தவணைக்கு செல்லாமல் விடுதல் என பல மாதங்களாக தமிழரசு சட்டத்தரணி சுமந்திரன் காலங்கடத்திவந்துள்ளார். இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு அதிகமாக எதிர்வாதம் புரிந்த சுமந்திரன் தனக்கு மிண்டும் கால அவகாசம் கோரி வழக்கினை பின் திகதியிட்டு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளா்.

எனினும் சுமந்திரனது விண்ணப்பத்தை ஏற்கமறுத்த மன்று வழக்கினை நாளை திங்கள்வரை ஒத்திவைத்தது. சுமந்திரன் தேவையான வாதத்தை முன்வைக்கலாம் என்றும் திங்கட்கிழமை நாள் போதவில்லை எனில் செவ்வாய்க்கிழமையும் அதுவும் போதுமானதாக இல்லை எனில் புதன், வியாழன் என தொடர்ச்சியாக வழக்கினை முன்னெடுப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதனால் வழங்கு விரைவாக முடிக்கப்பட்டுவிடுமோ என சுமந்திரன் தரப்பு அச்சம் கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது.

வழக்கின் பின்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனின் கடந்த ஆண்டு பெப்பரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுமந்திரனின் எடுபிடியான யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்டிற்கு மணிவண்ணன் சபையில் இருந்து ஆர்னோல்டின் மோசடிகளை அம்பலப்படுத்திவருவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் மணிவண்ணன் யாழ் மாநகரசபை எல்லைக்குள் வசிப்பவர் அல்ல எனக் கூறி மணிவண்ணனின் உறுப்புரிமையை பறிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் மணிவண்ணனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி சார்பாக சுமந்திரன் ஆஜராகிவருகின்றார்.

சுமந்திரனிடமே மணிவண்ணன் சட்டக்கல்வியினைக் கற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments