துபாய் புகைப்படச் சட்டம் கின்னஸ் சாதனை படைத்தது!


துபாயில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய துபாய் பிரேம் (புகைப்படைச் சட்டம்) கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

துபாய் ஜபீல் பூங்கா (Zabeel Park) அருகே செவ்வக வடிவில் மிகப் பெரி புகைப்பட சட்ட வடிவில் கட்டியெழுப்பப்பட்ட கட்டிடம். 150.24 மீற்றர் உயரமும் 95.23 மீற்றர் அகலமும் கொண்டது இக்கட்டிடம்.

இரும்பு வாளங்கள் மற்றும் கொங்கீறீட் போன்றவற்றைக் கொண்டு முப்பரிமாண  வடிவில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது புகைப்படச்சட்டம்.

புகைப்படச் சட்டத்தின் மேற்பகுதி தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் பாரவேத்தியும் செய்யப்பட்டுள்ளது.

இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை இரசிக்க முடியும்.

துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம்.

''துபாய்பிரேம்'' கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.


No comments