சரத் பொன்சேகா தயாராம்!

கோத்தபாயவிற்கு போட்டியாக சரத்பொன்சேகாவை களமிறக்க ரணில் முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இங்குள்ள பாதுகாப்பு நிலைமை சரியில்லை. பாதுகாப்புத்துறைக்கான அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அனைவராலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. இங்கு எந்தவொரு சோதனை நிலையங்களும் இல்லை. இதேபோன்ற தாக்குதல்களை, எந்தவொரு காரணத்துக்காகவும் மேற்கத்தேய அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தால், அங்கு பாதுகாப்பு மிகவும் பலமாகவே இருப்பதால் சாத்தியப்பட்டிருக்காது. எனவே, எமது நாடே தாக்குதல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதாலேயே, இங்கு தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

அதனாலேயே, எங்களது நாட்டை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட அமைப்பின் கீழ் பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம். வெகு நாள்களாக அவர்களுடன் பணியாற்றியிருக்கலாம். சரியான இலக்குகளை வைத்து, பணிப்புரை வரும் வரை அவர்கள் காத்திருந்து, இதைச் செய்திருக்கலாம். இந்நிலையில், இவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு, இதுவே சரியான நேரம் என்று அவர்கள் கணக்கிட்டு, தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments