கைக்குண்டு வைத்திருந்ததாக ஐவர் கைது


வற்றாப்பளை அம்மன் ஆலத்திற்குச் சென்ற இளைஞர்கள் ஐவர் பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தில் கைக்குண்டு இருந்ததாகக் கூறியே அவர்களின் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

யாழ்,வடமராட்சி,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே ஏற்ப்பட்ட வாய்த் தற்கத்தின் பின்னர் பொலிஸார் குறித்த வானில் குண்டை வைத்து விட்டு குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட பொய்யர்களுக்கும் குற்றச் சாட்டின்  கீழ்  குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

No comments