மாகந்துரே மதூஷ் இன்று நீதிமன்றில்

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு அமைய, குறித்த காலப்பகுதி இன்றுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மாகந்துரே மதூஷூக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் சந்தேக நபராக மதூஷ் குறிப்பிடப்பட்டபோதும், விசாரணைகளில் மூலம் சில குற்றசாட்டுக்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாகவும் அதற்கமைய தமது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுத்தப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் கடந்த 5ம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

No comments