அவசரகாலச் சட்ட வாக்கெடுப்பு - கூட்டமைப்பு எதிர்ப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது..

வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த ஆளுங்கட்சியின் 19 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

அதேவேளை, இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூன் மாதம் 4ஆம் திகதி கூடவுள்ளது.

No comments