அதி உச்ச இராணுவப் பாதுகாப்புடன் பாடசாலைகள் ஆரம்பம்வடமாகாண பாடசாலைகள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாின் அதியுச்ச பாதுகாப்புடன் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மாணவா்களின் வருகை வெகுவாக குறைந்தே காணப்படுகின்றது.

உயிா்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிப்பதது பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றையதினம் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இரானுவம், பொலிஸார் இணைந்து

சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சோதனைகளுக்கு மத்தியிலும்

பாதுகாப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற முதல் நாளில் மாணவர்களின் வருகை என்பது பாடசாலைகளில் வீழ்ச்சியாகவே காணப்படுகின்றது.

இதே வேளை நாடாளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும்

பாடசாலைகளில் கடும் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருக்கின்ற குறிப்பிடத்தக்கது.

No comments