சாவுக்கு தயாரெனில் இலங்கை வரலாம்?


இலங்கைக்கு விடுத்துள்ள சுற்றுலாத் தடையை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஆகியோரிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டு மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், உயர்ந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று (24) மாலை நடைபெற்ற விசேட சந்திப்பின் போது பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினரினால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் முன்னேற்ற நடவடிக்கைகள் என்பன குறித்தும் இதன்போது இலங்கை பிரதமர் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை பாதுகாப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாகவும் இலங்கை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.

No comments