சிறை மீண்ட செம்மலுக்கு விருந்து?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஞானசார தேரருக்கு விருந்தளித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விருந்துபசார நிகழ்வில் ஞானசார தேரர் உட்பட இன்னும் சில பெளத்த தேரர்களும் திலங்க சுமதிபாலவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால மற்றும் தேரர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments