காசு வாங்கி வைத்தியரை காப்பாற்ற முயற்சி?


குருனாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி மீது முன்வைத்துள்ள கருத்தடை சத்திர சிகிச்சைக் குற்றச் சாட்டை அறிவு ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என ரணில் ஆதரவு அரச தாதியர் அதிகாரிகளின் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை செய்யும் போது பயன்படுத்தும் குழாயை பொருத்த குறைந்தது சுமார் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்பது விசேட வைத்திய நிபுணர்களின் கருத்தாகும் எனவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் சாபி அவ்வாறு செய்திருப்பதாயின், சத்திர சிகிச்சையின் போது அவருடன் இருந்த ஏனைய வைத்தியர்களும், தாதி ஊழியர்களும் கண்ணை மூடிக் கொண்டா இருந்தனர் எனவும் ரத்னப்பிரிய கேள்வி எழுப்பினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

குறித்த அமைச்சர் ஒருவரிடம் பெற்ற பணம் தானா உங்களை இவ்வாறு பேச வைக்கின்றது என இந்தக் கருத்தைக் கூறிய போது ஊடகவியலாளர் தரப்பிலிருந்து ஒருவர் ரத்னப்பிரியவிடம் கேள்வி எழுப்பினார்.

சுகாதார அமைச்சர் ராஜிதவின் விசுவாசியான அவர் ஜெனீவாவில் இலங்கைக்கு கால அவகாசமொன்றை வழங்கும் நடவடிக்கைகளிற்காக ஜெனீவா சென்று பரப்புரைகளை செய்வதில் சமன் ரத்னப்பிரிய முக்கியமானவர்.

No comments