தமிழர் பகுதியில் வலுக்கும் எதிர்ப்பு!


இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் தனது பதவியை ராஜினாமா செய்ய தென்னிலங்கை 24 மணி நேர கால அவகாசத்தை வழங்கியுள்ள நிலையில் வவுனியா இளைஞர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்து பதாதைகளை வீதிகளில் அவர்கள் தொங்கவிட்டுள்ளனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கும் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது.இந்நிலையில் அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிசாட் பதியுத்தீனிற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் கூறி வருகின்றன.

இந்நிலையிலேயே வவுனியா இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வீதிகளில் பதாதைகளை தொங்கவிட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் பல பகுதிகளில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கட்கு எதிரான பதாதைகளை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமென்பவையும் ரிசாட் பதியுத்தீனை அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments