யூலைக் கலவரமே புலிகளை எழுச்சியுற வைத்தது


1983ம் ஆண்டு யூலை கலவரத்திற்கு பின்னா் தமிழீழ விடுதலை புலிகள் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு எழுச்சி பெற்றதுபோல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஊடாக தீவிரவாதத்திற்கு புத்துயிா் கொடுக்காதீா்கள்.

மேற்கண்டவாறு வீடமைப்பு அமைச்சா் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளாா். ஹம்பாந்தோட்ட- சூாியவெவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளனா்.

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டில் மீண்டும் ஒரு பேரவலத்தை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கடந்த 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களின் கடைகள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் உயிர்ச் சேதங்களும் விளைவிக்கப்பட்டன.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு எழுச்சி பெற்றனர். ஈஸ்டர் தாக்குதல்களின் பின் வன்முறைகளில் ஈடுபட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அவ்வாறான ஓர் பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமா?

என்பதனை நாம் மதிநுட்பத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments