நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் 18ம் திகதி குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநா் அலுவலகத்திற்கு அனுப்பபட்டுள்ள கடிதத்தினால் நல்லுாா் ஆலய சுற்றாடலில் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை ஆளுநா் அலுவலகத்திற்கு இந்த அநாமதேய கடிதம் அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றது. அதில் 18ம் திகதி சனிக்கிழமை நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்படும் என எச்சாிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட ஆளுநா்,

உடனடியாக பாதுகாப்பு ஒழுங்குகளை செய்துள்ளதுடன். உடனடியாக விசாரணைகளை நடாத்தி கடிதம் அனுப்பியவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா். இதேவேளை ஆளுநரின் அறிவுறுத்தலை உடன் நடைமுறைப்படுத்த

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பணித்த வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர், ஆலயத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இதனையடுத்து அநாமதேயக் கடிதம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள

பொலிஸார், இன்று நண்பகல் தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளைமறுதினம்

சனிக்கிழமை தமிழ் மக்கள் முன்னெடுக்க உள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

No comments