நடுகல் வணக்க நாள் நிகழ்வு-யேர்மனி !!

நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின் இனஉணர்வு மிக்க பேச்சுக்கள், கவிதைகள்;, காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரைகளும் இடம்பெற்றன.
இவ் நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குமான மீள்தொடக்கப் புள்ளியாக அமையப்பெற்றதுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டதை தொடர்ந்து,நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.
Post a Comment