பறவைக்கு மருத்துவமனை கட்டிய நாடு !

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவை ஆகும்.
இந்த வகை ராஜாளி பறவைகள் அரபுநாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பலர் ராஜாளியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்

இந்நிலையில் அபுதாபியில் ராஜாளிகளுக்கு என தனியாக சிறப்பு மருத்துவமனை முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவற்றின் அலகு, கால் நகங்களை சுத்தம் செய்தல், தேவையான மருந்து வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சை தொடங்கி அறுவை சிகிச்சை வரை அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.

No comments